×

ஆந்திர மலைப்பாதையில் இருந்து 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி: 10 பேர் படுகாயம்

திருமலை: ஆந்திராவில் மலைப்பாதையில் இருந்து 100 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து 4 பேர் பலியாகினர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜூ மாவட்டம், படேரு பகுதியில் மோதாலம்மா கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல மலைப்பாைதயை கடந்து தான் செல்ல வேண்டும். இதற்காக மாநில அரசு சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்று மோதாலம்மா கோயிலுக்கு சோடாவரத்தில் இருந்து படேரு நோக்கி அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.

மலைப்பாதையில் சென்றபோது ஓட்டுநர் மரக்கிளை பஸ் மீது உரசுவதை தவிர்க்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்து மரக்கிளையில் சிக்கி அந்தரத்தில் தொங்கியது. இதில், அந்தரத்தில் இருந்து சிலர் கீழே விழுந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டினம், படேரு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த படேரு போலீசார், தீயணைப்புத்துறையினர், போக்குவரத்து துறையினர் அங்கு வந்து அந்தரத்தில் தொங்கிய பஸ்சை மீட்க முழு வீச்சில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஆந்திர மலைப்பாதையில் இருந்து 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி: 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Andhra ,Tirumala ,Andhra Pradesh ,Andhra mountain pass ,
× RELATED வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர...